மேலும் செய்திகள்
மாங்காடில் வீடு பகுந்து 9 சவரன் கொள்ளை
02-Oct-2024
கோவை : துடியலுார் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச்சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ஜி.என்., மில்ஸ் கேலக்ஸி அபார்ட்மென்டில் வசிப்பவர் உமைஸ் பர்வீன், 48. இவர் கடந்த 6ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார்.வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவலறிந்து, பர்வீன் தனது சகோதரர் ஜாசிம் உடன் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.வீட்டிற்கு சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ஆறு சவரன் தங்க வளையல், நான்கு சவரன் செயின் உள்பட மொத்தம், சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான 12.5 சவரன் நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Oct-2024