உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகரில் பிரச்னைகள் நிறைய இருக்கு! பா.ஜ. மனு கொடுத்து நினைவூட்டல்

நகரில் பிரச்னைகள் நிறைய இருக்கு! பா.ஜ. மனு கொடுத்து நினைவூட்டல்

பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி நகராட்சி ராஜாமில் ரோட்டை புதுப்பிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, நகர பா.ஜ.வினர், நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர். பொள்ளாச்சி நகர பா.ஜ. தலைவர் கோகுல்குமார் மற்றும் நிர்வாகிகள், நகராட்சி கமிஷனரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி நகரில் பல்வேறு பகுதிகளில் தெருநாய்களின் தொந்தரவு அதிகமாகி உள்ளது. அவை, நடந்து செல்வோர், இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாலிங்கபுரம், 10வது வார்டு சர்க்கஸ் மைதானம் அருகே அமைந்துள்ள நகராட்சி திடக்கழிவு மேலாண்மை மையத்தில், கழிவு உடனுக்குடன் மறுசுழற்சி செய்யாமல் கொட்டி வைப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.மருத்துவமனைகள், பள்ளிகள், அதன் அருகே அமைந்துள்ளதால் நோய் தொற்று அபாயம் உள்ளது. இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி அலுவலக சாலை, ராஜாமில் ரோடு குண்டும், குழியுமாக உள்ளன. இதனால், விபத்துகள் ஏற்படுகிறது. ரோட்டை சீரமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர். இதுபோன்று மகாலிங்கபுரம், மேற்கு போலீசாரிடம் கொடுத்த மனுவில், 'மகாலிங்கபுரம் பால்சன் நகரில், சமூகவிரோதிகள் ரோட்டிலேயே அமர்ந்து போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். அதை கேட்க முயலும் மக்களை தாக்குகின்றனர். இரவு நேரங்களில் தனியாக செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சுழற்சி முறையில் போலீசாரை நியமிக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ