உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர அதிக ஆர்வம்! மாணவர்கள் எண்ணிக்கை உயர வாய்ப்பு

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர அதிக ஆர்வம்! மாணவர்கள் எண்ணிக்கை உயர வாய்ப்பு

கோவை: கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு, கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.தமிழகத்தில், மொத்தம், 176 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகளில் இளநிலையில், பி.ஏ., பி.எஸ்சி., யில் பல்வேறு பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மொத்தமுள்ள, 176 கல்லுாரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.25 லட்சம் இடங்கள் உள்ளன.பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் கடந்த, 7ம் தேதி துவங்கின.இளநிலை படிப்புகளில் சேர மாணவர்கள், www.tngasa.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.விண்ணப்பங்கள் நேரடியாக வினியோகிக்கப்படவில்லை. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது தெரியவந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவு, அதிகம் பேர் பணம் செலுத்தியுள்ளதாக, கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.பெயர் வெளியிட விரும்பாத, அரசு கலை, அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில், 'சமீப ஆண்டுகளாக கலை, அறிவியல் கல்லுாரியில் சேர, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தாண்டும், அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, 2.03 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 1.62 லட்சம் பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். விண்ணப்ப பதிவுக்கு இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை