இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை
கோவை : கோவை மாவட்டத்திற்கு நாளை(இன்று) கனமழை அறிவிப்பு ஏதும் இல்லாததால், இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை இல்லை.இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், ''கோவை மாவட்டத்துக்கு நாளை (இன்று) கனமழை அறிவிப்பு ஏதும் இல்லை அதிகபட்சம் 2 மி.மீ.,மழை பெய்யும் என அறிக்கை வந்துள்ளது. அதனால் விடுமுறை அறிவிப்பு இல்லை. ஒரு வேளை, இரவு கனமழை பெய்தாலோ, அதன் பின்பு மழை தொடரும் பட்சத்தில், அதற்கேற்ப அறிவிப்பு வெளியாகும்,'' என்றார்.