உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய மேம்பாலத்தில் இரவில் வாகனம் செல்ல தடை இல்லை

புதிய மேம்பாலத்தில் இரவில் வாகனம் செல்ல தடை இல்லை

கோவை; கோவையில் திறக்கப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில், இரவு நேரத்தில் வாகனம் செல்ல தடை விதிக்கப்படவில்லை. கோவை அவிநாசி ரோட்டில், புதிய மேம்பாலம் திறக்கப்பட்டதும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இரவு 9 முதல்மறுநாள் காலை 7 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. அதேபோல், ஏறு தளங்கள் மற்றும் இறங்கு தளங்கள் அமைந்துள்ள இடங்களில், டிவைடர்கள் வைத்து மறைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ''புதிய மேம்பாலம் திறக்கப்பட்ட அன்று, சீரியல் பல்புகளை கழற்றுவதற்காக, இரண்டு மணி நேரம் மட்டும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஒரு வாரத்துக்கு இரவு 9 முதல் அதிகாலை 7 மணி வரை, புதிய பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதாக, வெளியான தகவல் முற்றிலும் தவறானது. பாலத்தில் இரவு நேரத்தில் செல்ல எந்த தடையும் விதிக்கப்படவில்லை. 24 மணி நேரமும் வாகனம் செல்லலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ