மேலும் செய்திகள்
சேதம் அடைந்த ரோடு சீரமைக்க வலியுறுத்தல்
23-May-2025
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொக்கனூர் அரசு துணை சுகாதார நிலையத்தில், மருந்து வழங்க ஆளில்லாததால் நோயாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு சொக்கனூர் ஊராட்சி மற்றும் சுற்று பகுதி கிராமங்களில், எட்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இப்பகுதி மக்கள் அனைவரும், சொக்கனூர் துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.தற்போது, சொக்கனூர் சுகாதார நிலையத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மருந்து வழங்கும் பணியாளர் இருக்கிறார். மீதமுள்ள மூன்று நாட்கள் வடசித்தூரில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் இருக்கிறார். இதனால், நோயாளிகள் மருந்து வாங்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.எனவே, மக்கள் நலன் கருதி சுகாதார நிலையத்தில் வாரம் முழுவதும் மருந்து வழங்கும் பணியாளர் பணியில் இருக்க வேண்டும் அல்லது புதிதாக மருந்தாளுநர் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
23-May-2025