வேகத்தடை தெரிவதில்லை விபத்துக்கு தடையேதுமில்லை! சாய்பாபா காலனி யுவபாரதி பள்ளி அருகே வாகனங்களுக்கு தொல்லை
புதிய வேகத்தடையால் காந்திருக்கு அபாயம்
சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டில், யுவபாரதி நர்சரி பள்ளி அருகில் புதிதாக போடப்பட்டிருக்கும் வேகத்தடையில், வெள்ளையடிக்கவில்லை. இதனால் வேகத்தடை கண்களுக்கு தெரியாமல்; இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அருகிலேயே பள்ளி இருப்பதால், உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜா, சாய்பாபாகாலனி. ஒரு வாரமாக கவனிப்பாரில்லை
வடவள்ளி, பாலாஜி நகர் கோதாவரி தெரு, பாரதியார் தெரு சந்திப்பில் பூமிக்கு அடியில் குழாய் இணைப்பில் பழுதாகியுள்ளதால், ஒரு வாரமாக குடிநீர் வீணாகி பக்கத்து காலிமனைகளில் தேங்கி வீணாகிறது. இதுபோன்று அடிக்கடி ஏற்படுகிறது. உடனடியாக இதனை சீர் செய்யவேண்டும்.- ராமலிங்கம், பாலாஜி நகர் குடியிருப்போர் நல சங்கம். தெரு விளக்கு எரிவதில்லை
கோவை வார்டு, 15 ஜி.என்.மில்ஸ் ஸ்ரீ சூர்யலட்சுமி கார்டன்ஸ், பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தெருவிளக்கு எரிவதில்லை. இதனால், அவ்வழியில் நடந்து செல்வதற்கே அச்சம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சங்கர் சுப்பிரமணியன், ஜி.என்.மில்ஸ். வீணாகும் குடிநீர்
கோவை மாநகராட்சி 3ம் வார்டு அத்திப்பாளையம் சாலையில், சின்னவேடம்பட்டி மெயின்ரோட்டில் பழமையான கோதண்டராமர் திருக்கோவிலின் முன்புறம், குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் தொடர்ந்து வீணாகிவருகிறது. புரட்டாசி மாதக் கடைசியில், பக்தர்கள் அதிகமாக வருவர். அதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜகோபால், உடையாம்பாளையம். விபத்து அபாயம்
மாநகராட்சி 60வது வார்டு உப்பிலிபாளையம் மஞ்சள் விநாயகர் கோவில் எதிரே, மெயின் ரோட்டில் மின்கம்பம் மோசமான நிலையில் உள்ளது. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் சீர்செய்ய வேண்டும்.-சங்கர், உப்பிலிபாளையம். துாய்மைஎன்ன விலை
வார்டு, 66 நியூ ஹவுசிங் யூனிட் அம்மன்குளம், புலியகுளம் பகுதியில், கடந்த இரண்டு வாரங்களாக சுத்தம் செய்யப்படவில்லை. குப்பை நிரம்பி வழிவதால், நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.-சுகந்தா, அம்மன்குளம். சாலைகள் ஆக்கிரமிப்பு
டி.பி.ரோடு ரத்தின விநாயகர் ஆலயம் பகுதி மற்றும் தபால்நிலையம் அருகில் உள்ள அனைத்து கடைகளும், குடியிருப்புகளும் கடைகள், குடியிருப்பு முன் தடுப்பு அமைத்துசாலையை ஆக்கிரமித்துள்ளனர். இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடமின்றி தவிக்கும் நிலை தொடர்கிறது. காவல்துறையினர் இதை கண்டுகொள்வதில்லை.- ஆர் நடராஜன், கே.கே. புதுார். இருளில் அன்பு நகர்
சரவணம்பட்டி, அன்புநகர் -ஒன்றாவது வீதியில் தெரு விளக்கு கடந்த ஒருமாத காலமாக எரிவதில்லை. தெருவிளக்கிற்கான சுவிட்ச் ப்யூஸ் கட்டையை உபயோகிக்கும் வகையில் அமைத்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மாற்ற வேண்டும்.- சவுந்தரராஜன், சரவணம்பட்டி சேதமான சாலை
வார்டு 83ல் கல்லுாரி சாலை முழுவதும், மோசமாக உள்ளது. இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.- பாலகிருஷ்ணன், வார்டு எண் 83. அரைகுறை வேலை
பீளமேடு துக்கினார் வீதியில், குழாய் பதிவு பணிககளை பாதியில் முடிக்காமல் சென்றுள்ளனர். நிலத்தில் பதிக்கவேண்டிய குழாய்களை, முழுமையாக பதிக்காமல் விட்டுள்ளனர். குறுகிய சாலை என்பதால், பொதுமக்கள் நடக்கவும், வாகனங்கள் ஓட்டவும் சிரமப்படும் சூழல் எழுந்துள்ளது.- கனிஷ்கா, பீளமேடு.