உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் கழிப்பறைக்கு தண்ணீர் வசதியில்லை; மாநகராட்சி கமிஷனர் அதிர்ச்சி

சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் கழிப்பறைக்கு தண்ணீர் வசதியில்லை; மாநகராட்சி கமிஷனர் அதிர்ச்சி

கோவை; கோவையின் இதயப்பகுதியாக அமைந்திருக்கிறது ரேஸ்கோர்ஸ். இப்பகுதியை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மண்டல தலைவர் மீனா, உதவி கமிஷனர் செந்தில்குமரன், நிர்வாக பொறியாளர் கருப்பசாமி உள்ளிட்டோர், நேற்று ஆய்வு செய்தனர்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவழித்து அமைத்த, 'மீடியா டவர்' பகுதியில் முட்செடிகள் வளர்ந்திருப்பதை பார்த்த கமிஷனர், அவற்றை அகற்றி, முறையாக பராமரிக்க, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.அப்பகுதியில் பதித்துள்ள கற்களால், 'சைக்கிளிங்' செல்பவர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். அவர்களுக்காக, அப்பகுதியில் தார் சாலை அமைத்துக் கொடுக்க, மண்டல தலைவர் அறிவுறுத்தினார்.ரேஸ்கோர்ஸ் பகுதிக்கான, வார்டு சுகாதார ஆய்வாளர் அலுவலகத்துக்கு கமிஷனர் சென்றார். மிகவும் பழுதடைந்த கட்டடமாக இருந்தது; கட்டட சுவர்களில் விரிசல் காணப்பட்டது; செடிகள் வளர்ந்திருந்தன. கழிப்பறைக்கு தண்ணீர் வசதி இல்லாதது தெரியவந்தது. 'போர்வெல்' வற்றி விட்டது. மிகவும் சிரமத்துக்கு உள்ளானதால், தற்காலிக ஏற்பாடாக, லாரி தண்ணீர் வரவழைக்கப்படுகிறது.லாரி வருவதற்கு தாமதம் ஏற்பட்டால், அவசரத்துக்கு அருகாமையில் உள்ள அரசு கல்லுாரிக்குச் சென்று குடத்தில் தண்ணீர் எடுத்து வருகிறோம் என, பெண் ஊழியர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.அதை கேள்விப்பட்டு, மாநகராட்சி கமிஷனர் அதிர்ச்சி அடைந்தார். புதிதாக 'போர்வெல்' போடுவதற்கும், அலுவலகத்தை புதுப்பித்துக் கட்டுவதற்கும் மதிப்பீடு தயாரிக்கவும், பொறியியல் பிரிவினருக்கு, கமிஷனர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி