உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூர் தமிழ் கல்லுாரியில் தேவார பண்ணிசை நிகழ்ச்சி

பேரூர் தமிழ் கல்லுாரியில் தேவார பண்ணிசை நிகழ்ச்சி

தொண்டாமுத்தூர் : பேரூர் ஆதினத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், தேவாரம் எனும் அற்புதக் கொடையை நமக்கு அருளிச்சென்ற, 'தேவார நாயன்மார்களுக்கு' நன்றியை வெளிப்படுத்தவும், இன்றைய இளைஞர்கள் மத்தியில், தேவாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஈஷா சமஸ்கிருதி மாணவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள, 15க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற தலங்களில், 'தேவார பண்ணிசை அர்ப்பணிப்பு' நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் வழிகாட்டுதலின்படி, இந்நிகழ்ச்சி நடக்கிறது. முதல் நிகழ்ச்சி, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் முன்னிலையில், பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில் நடந்தது. இதில், சத்குரு குருகுல மாணவர்கள், தேவார பாடல்களை பாடினர்.இந்நிகழ்ச்சியில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் பேசுகையில், இந்த குழந்தைகள், தேவாரத்தை அருமையான முறையில், நம்முடைய ஓதுவார் மூர்த்திகள் எப்படி பாடுகின்றாரோ அதுபோன்று அழகாக பாடக்கூடிய வல்லமை பெற்றவர்கள்.இந்த ஒரு கலை மட்டுமல்லாமல், நம்முடைய பழமை மிகுந்த கலைகள் அனைத்தையும், குழந்தைகளுக்கு சத்குரு கற்றுத் தருகின்றார். நம் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்காகவே இந்த முயற்சி,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ