மேலும் செய்திகள்
ரோட்டோர பள்ளத்தை சமப்படுத்த கோரிக்கை
20-Aug-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அரசம்பாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நேற்று திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. கிணத்துக்கடவு, அரசம்பாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நிகழ்ச்சிகள், 3ம் தேதி காலையில், திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மண்ணெடுத்தல், காப்பணிதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. தொடர்ந்து முதற்கால வேள்வி, வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடந்தது. நேற்று, 4ம் தேதி, காலையில், திருச்சுற்று தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. அதன்பின், இரண்டாம் கால வேள்வி நிறைவு செய்து, காலை, 9:30 மணிக்கு, விமான கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, காலை, 10:15 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், அரசம்பாளையம் சுற்று வட்டார மக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
20-Aug-2025