உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

சோமனூர்; சோமனூர் அடுத்த சேடபாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, ஊஞ்சல் உற்சவத்தை ஒட்டி திருவிளக்கு வழிபாடு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட திருவிளக்குகளுக்கு, பூக்களாலும், குங்குமத்தாலும் பெண்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். முன்னதாக, சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை