உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் ஆரவாரம்

வாங்க சிரிக்கலாம் கோவை நகைச்சுவை சங்கம் சார்பில், 'வாங்க சிரிக்கலாம்' நகைச்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. 'வாழ்க்கை என்னும் வாட்ஸ்அப்' என்ற தலைப்பில், ஈரோடு மகேஷ் பங்கேற்று பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளார். சிரிக்கவும், சிந்திக்கவும் சிறப்பான நிகழ்ச்சி, வாங்க வயிறு குலுங்க சிரிக்காலம். இடம்: இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அரங்கு: நுால் வெளியீட்டு விழா எழுத்தாளர் மு.ஆனந்தன் எழுதிய 'ஆரவல்லி அழிப்பின் அரசியல்' என்ற நுால் வெளியீட்டு விழா நடக்கிறது. சுற்றுச்சூழலியல் ஆர்வலர் ஓசை காளிதாசன் நுாலை வெளிட்டு பேசுகிறார். எழுத்தாளர்கள் கோவை சதாசிவம், ஒடியன் லட்சுமணன், கரீம் ஆகியோர் நுால் குறித்து கருத்துரை வழங்குகின்றனர். இடம்: தாமஸ் கிளப்: நாட்டிய நாடகம் ஸ்ரீசங்கர கிருபா -ஆதி மகோற்சவம் நிறைவு வாரம் -பூர்ணாஹுதி விழாவை முன்னிட்டு, அகிலா வழங்கும் 'நாம ராமாயணம்' பரதநாட்டியம், ஸ்ரீமதி ரோஜா கண்ணன் குழுவினர் வழங்கும் 'தியாக ரகசியம்' நாட்டிய நாடகம் மற்றும் டாக்டர் ஸ்ரீரஞ்சினி கோடம்பள்ளி வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. வாத்திய கலைஞர்கள் ஸ்ரீகோபகுமார், நாராயண பிரகாஷ் ராஜீவ்கோபால் பங்கேற்க உள்ளது. இடம்: ஸ்ரீ சங்கர கிருபா கூத்தம்பலம்: வேலை வாய்ப்பு கோவையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 250 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 15 ஆயிரத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையில் அனுபவம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் பங்கேற்கலாம். 8 ம் வகுப்பு முதல், பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இடம்: ரத்தினம் கலை: எலக்ட்ரோடெக் கண்காட்சி கோவையில் 'எலக்ட்ரோடெக்' மின் மற்றும் தொழில்துறை மின்னணுவியல் கண்காட்சி காட்சி நடக்கிறது. இதில் நவீன மின் பயன்பாட்டு பொருட்கள், தொழில்த்துறைக்கு தேவையான மின் பொருட்கள் இடம் பெறுகின்றன. அரிய வகை மின்சார வாகனங்கள் இந்த கண்காட்சி பிரத்தியேகமான அரங்கில் இடம் பெறுகிறது. இடம்: கொடிசியா வணிக வளாகம்.தேதி: 21 முதல் 24 வரை: ஓவிய கண்காட்சி 'அரோரா' (AURORA SERIES 2026) என்ற தலைப்பில் ஓவியகண்காட்சி நடக்கிறது. இதில் பிளஸ் 2 மாணவி, ஓவியர் தனீசாவின் 'வேறுபட்ட மனங்கள், சமமான கனவுகள்' என்ற தலைப்பில் தனது ஓவியங்களை காட்சிப்படுத்தி இருக்கிறார். இக்கண்காட்சியில் குழந்தைகள் கல்வி சார்ந்த ஓவியங்கள் பல இடம் பெற்றுள்ளன. நவீன மற்றும் இயற்கை சார்ந்த ஓவியங்கள் என, 50 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம் பெற்றுள்ளனர். இடம்: கோவை கஸ்துாரி சீனிவாசன் ஆர்ட் கேலரி:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்