| ADDED : செப் 10, 2026 07:03 PM
1. ஒலிம்பியன் சர்க்கஸ் வெளிநாட்டு சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷனல் ஒலிம்பியன் சர்க்கஸ் நடக்கிறது. இந்த சர்க்கஸில் பபுள்ஷோ, ஜக்ளிங், சைக்கிளிங், லேசர்மேன் காமெடி கிளவுன், ஏரியல் அண்ட் பேலன்சிங் ஆக்ட் என, பல சுவாரஸ்யமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இடம்: மாநகராட்சி கலையரங்கம்: தேதி: செப்.: 2. மெகா மலர் கண்காட்சி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மெகா மலர் கண்காட்சி நடக்கிறது. மலர் அலங்காரங்கள் மற்றும் மலர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு உருவங்கள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம். இடம்: சி.ஐ.டி.கல்லுாரி எதிரே உள்ள மைதானம்: தேதி: செப்.10 முதல் அக்.20 வரை.: 3. பேஷன் எக்ஸ்போ ரேஸ்கோர்சில் பேஷனிஸ்டா கண்காட்சி நடக்கிறது. பல்வேறு வகையான ஆடை, அணிகலன்கள் மற்றும் பேஷன் பொருட்கள் இடம்பெறும் கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் பேஷன் ஆர்வலர்கள் பங்கேற்று பொருட்களை வாங்கலாம். இடம்: ஹோட்டல் தாஜ் விவாந்தா: தேதி: செப். 13: 4. லுாநார் கிராமம் தீனம்பாளையத்தில் ‘லுாநார் கிராமம் 04’ இசை நிகழ்ச்சி நடக்கிறது. இசை, கலை, இயற்கை மற்றும் கதைகள் இணைந்த அனுபவத்தை நிகழ்ச்சியில் ரசிக்கலாம். இசை ஆர்வலர்களுக்கு இந்த நிகழ்ச்சி செம தீனி. இடம்: கானி நிலம்: தேதி: செப். 12.: 5. பறவைகள் கணக்கெடுப்பு பயணம் இயற்கை சூழ்ந்த பகுதிகளில் அழகிய பறவைகளை கண்டுகளிக்கும் வகையில் பறவைகள் கண்காணிப்பு நடைபயணம் நடக்கிறது. அனுபவம் வாய்ந்த பறவை வழிகாட்டிகளுடன் நடைபெறும் இந்த நிகழ்வில், இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்கலாம். இடம்: செங்குளம் ஏரி: தேதி: செப். 12: 6. ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க தமிழ் இசையை மையமாகக் கொண்டு, ‘ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க’ தமிழ் இசை கச்சேரி நடக்கிறது. பல்வேறு இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில், இசை ரசிகர்கள் பங்கேற்று என்ஜாய் செய்யலாம். இடம்: கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரி: தேதி: செப். 12.: 7. பக்தி பீட்ஸ் புரோசோன் மால் மற்றும் தினமலர் சார்பில், பிரபல பிரம்ம பஜன்களை மையமாகக் கொண்டு ‘பக்தி பீட்ஸ்’ என்ற புதிய தலைமுறை பஜன் ஜாம்மிங் நிகழ்ச்சி நடக்கிறது. நேரடி பஜன் இசை, அனைவரும் இணைந்து பாடும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. அனுமதி இலவசம். இடம்: ப்ரோசோன் மால்: தேதி: செப். 12: 8. பர்க்கா ரிது பர்க்கா ரிது என்ற இசை நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நடக்கிறது. இசை, தெய்வீகத்தை கொண்டாடும் இந்நிகழ்ச்சியில் பரத்சுந்தர் வாய்ப்பாட்டு மற்றும் விதுஷி ஏ. கன்னியாகுமரி வயலின் இசை வழங்குகின்றனர். அனுமதி இலவசம். இடம்: ஸ்ரீ மாருதி கான சபா: தேதி: செப். 12.: 9. கோவை மீட்டப் புத்தக ஆர்வலர்களுக்கான கோவை மீட்டப் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சக வாசகர்களை சந்தித்து, புத்தகங்கள் குறித்து உரையாடலாம். ‘பாஸ் தி பேஜ்’ என்ற சிறப்பு நிகழ்வும் உண்டு. புக்மார்க் பரிமாற்றமும் நடக்கிறது. அனுமதி இலவசம். இடம்: டிகம்யூன் கபே: தேதி: செப். 13.: 10. நடனாஞ்சலி கலை நிகழ்ச்சி ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் மற்றும் ஜெய் ஜெய் மில்ஸ் (இந்தியா) நிறுவனம் சார்பில், ‘நடனாஞ்சலி’ கலை நிகழ்ச்சி மாலை 6.15 முதல் 8.55 வரை நடக்கிறது. பரதநாட்டியம், கதக், குச்சிப்புடி, ஒடிசி நடன நிகழ்ச்சிகளை ரசிக்கலாம். அனுமதி இலவசம். இடம்: பட்டீஸ்வரர் கோயில்: தேதி: செப். 11: