உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணம் திருடிய நபரை தாக்கியவர்கள் கைது

பணம் திருடிய நபரை தாக்கியவர்கள் கைது

நெகமம்; நேபாளம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோகித், 16. இவர் நெகமத்தில் உள்ள சிக்கன் கடையில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 25ம் தேதி இரவு நெகமத்தில் உள்ள தர்ஷன், 20, என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில், 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடினார். இதை சி.சி.டி.வி., வாயிலாக கண்ட தர்ஷன், இவரது சித்தப்பா கணேஷ், 39, மற்றும் ஹோட்டல் மாஸ்டர் ஓம் பிரகாஷ், 45, ஆகிய மூவரும் ரோகித்தை தாக்கினர். இதில் காயமடைந்த ரோகித்தை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரோகித்தை தாக்கியதற்காக மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், ேஹாட்டலில் பணத்தை திருடிய ரோஹித் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ