உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிக்கன் குழம்பில் பல்லி போட்டவர்கள் கைது

சிக்கன் குழம்பில் பல்லி போட்டவர்கள் கைது

கோவை; கோவை ஆர்.எஸ்.புரம் புரூக்பாண்ட் ரோட்டில், 'கோவை பிரியாணி' கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த, மே 26ம் தேதி கடைக்கு வந்த ஈரோடு மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த கலையரசு உள்ளிட்ட ஐந்து பேர் பிரியாணி சாப்பிட்டனர். அப்போது பிரியாணிக்கு வழங்கப்பட்ட சிக்கன் குழம்பில், பல்லி கிடந்ததாக கலையரசு புகார் தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ, சமூகவலைதளங் களில் பரவியது. தனது ஓட்டல் மீது திட்டமிட்டு, களங்கம் ஏற்படுத்தி வியாபாரத்தை முடக்க சதி நடந்துள்ளதாக, உரிமையாளர் உமாபதி போலீசாரிடம் புகார் அளித்தார். சிசிடிவி கேமரா காட்சி களின்படி, ஆர்.எஸ்.புரம் போலீசார், அன்றைய தினம் சாப்பிட வந்த ஈரோடு மாவட்டம் குமார பாளையத்தை சேர்ந்த, கலையரசு, அண்ணாதுரை, 39, சரவணன், 43, முருகன், நடராஜன் ஆகிய ஐந்து பேர் மீது, வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் அவர்கள் குழம்பில் பல்லியை போட்டது உறுதியானது. ஐந்து பேரையும் போலீசார், கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஐவரில் நடராஜன், முன் ஜாமீன் பெற்றார். அண்ணாதுரை, சரவணன் ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வரு கின்றனர். போலீசார் கூறுகையில், 'உமாபதியுடன் இவர் களுக்கு ஏற்கனவே முன் பகை இருந்துள்ளது. அதனால், அவரது தொழிலை முடக்கும் விதத்தில் பல்லியை சிக்கன் குழம்பில் போட்டுள்ளனர். இது, கண்காணிப்பு கேமரா காட்சிகளில் தெரிந்தது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை