மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
27-Dec-2025
தொண்டாமுத்தூர்: -: பேரூர், பரட்டையம்மன் கோவில் வீதியில், அப்பகுதி மக்கள் இணைந்து பொங்கல் கலை நிகழ்ச்சி நடத்தினர். அப்போது இரவு 11:00 மணிக்கு மேலானதால், அப்பகுதியைச் சேர்ந்த ஞானபிரசாந்த்,26 என்பவர், அனைவரையும் அங்கிருந்து கிளம்பி அவரவர் வீட்டிற்கு செல்ல கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த பரட்டையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ரமேஷ் குமார், 43, மனோஜ் குமார், 21, ராகுல், 22, சபரி, 24 ஆகிய நால்வரும் சேர்ந்து, ஞான பிரசாந்தை சரமாரியாக தாக்கி, கத்தியால் நெத்தியில் வெட்டியுள்ளனர். தடுக்க வந்த ஞானபிரசாந்தின் தாய் ஸ்ரீலாவதியையும் தாக்கியுள்ளனர். காயமடைந்த ஸ்ரீலாவதி மற்றும் அவரது மகன் ஞானபிரசாத் ஆகியோர், பேரூர் போலீசில் புகார் அளித்தனர். பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷ் குமார், மனோஜ் குமார், சபரி ஆகிய மூவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய ராகுலை போலீசார் தேடி வருகின்றனர்.
27-Dec-2025