மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள் : விருதுநகர்
26-Jan-2026
கோவை: சிறுமுகை, ஆணைப்பள்ளிபுதுார் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மூவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், சிறுமுகை எஸ்.ஆர்.எஸ்., நகரை சேர்ந்த ஷேக் தாவுத், 24, அஜய், 25, மேட்டுப்பாளையம் ஓடந்துறையை சேர்ந்த சான்ஸா, 22 எனத் தெரிந்தது. விற்பனைக்காக ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி வந்தது தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 160 போதை மாத்திரைகள், 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
26-Jan-2026