உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காப்பர் ஒயர் திருடிய மூன்று பேர் கைது

காப்பர் ஒயர் திருடிய மூன்று பேர் கைது

அன்னுார்: தோட்டங்களில் காப்பர் ஒயர் திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர். பொத்தியாம் பாளையத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 53. விவசாயி. இவருடைய தோட்டத்தில் கடந்த மாதம் 350 அடி நீளமுள்ள மின் மோட்டார் காப்பர் ஒயரை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மற்ற சில தோட்டங்களிலும் ஒயர் திருட்டு போனது குறித்து தெரிந்தது. பாலகிருஷ்ணன் உட்பட நால்வர், இரு நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் பாதுகாப்புக்கு சென்ற போது, ஒயர் திருட வந்த மூவரை துரத்திய போது அவர்கள் தப்பினர். அன்னுார் போலீசில் அளித்த புகாரின் படி, சம்பவத்தில் ஈடுபட்ட பொத்தியாம்பாளையத்தை சேர்ந்த கார்த்தி, சதீஷ், சிங்காநல்லுார் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை