மேலும் செய்திகள்
நகை பறித்தவர் மீது 'குண்டாஸ்'
16-Jul-2025
கோவை; கோவை மாநகர், வடகோவை பகுதியை சேர்ந்த கருப்பன்,80, என்பவர், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே போல, ரேஸ்கோர்ஸ் பகுதியில், வடமாநில தொழிலாளரை தாக்கி பணம் பறித்த வழக்கில், கோவைபுதுாரை சேர்ந்த செந்தில்குமார்,33, அன்னுாரை சேர்ந்த நவ்பல் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால், மூவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து மூவரும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவு நகல், கோவை சிறையிலுள்ள மூவரிடம் வழங்கப்பட்டது.
16-Jul-2025