உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன விபத்தில் மூவர் படுகாயம்

வாகன விபத்தில் மூவர் படுகாயம்

கிணத்துக்கடவு; கோவை, மலுமிச்சம்பட்டியை சேர்த்தவர் ரகுநாத், 34. இவர், பைக்கில் பொள்ளாச்சி - கோவை ரோட்டில் தாமரைக்குளம் அருகே சென்றார். அப்போது, அவ்வழியாக, கிணத்துக்கடவை சேர்ந்த மகாலட்சுமி, 43, நான்கு வயது மகன் வருண் உடன், ஸ்கூட்டியில் சென்றார். அப்போது, ஸ்கூட்டி மீது பைக் மோதியதில், மூவரும் தடுமாறி ரோட்டில் விழுந்து மூவரும் படுகாயமடைந்தனர். விபத்து ஏற்பட்டதும், அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு, கிணத்துக்கடவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ