உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம்

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை,; கோவை, சுங்கம் பகுதியில் நடந்து சென்ற பெண்ணை, வாலிபர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். அப்பகுதி மக்கள் இதைத் தடுக்க முயன்ற போது, அவர்களை கத்தியை காட்டி மிரட்டினார்.அப்பெண், ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், 29 என்பவரை பிடித்து, சிறையில் அடைத்தனர்.இதேபோல், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மொட்டையன், 35 என்பவர், போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.இருவர் மீதும், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சிறையில் உள்ள இருவரிடமும், இதுகுறித்த ஆணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ