மேலும் செய்திகள்
புகையிலை பொருள் வைத்திருந்தவர் கைது
18-Mar-2025
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தாமரைக்குளம் பகுதியில், சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.கிணத்துக்கடவு, தாமரைகுளத்தை சேர்ந்தவர் சக்திவேல் முருகன், 41, பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனையாவது குறித்து, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில், கிணத்துக்கடவு போலீசார் கடையில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது உறுதியானது. இதில், கடையில் இருந்து, 263 கிராம் அளவில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சக்திவேல் முருகனை போலீசார் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.
18-Mar-2025