கோவை பள்ளி, கல்லுாரிகளுக்கு மழை காரணமாக இன்று விடுமுறை
கோவை : கோவையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு ஒரு நாள் விடுமுறையை, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள, கோவை மாவட்டத்தில் மழை இடைவிடாது தொடர்ந்து வருவதால், மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு 23ம் தேதி (இன்று) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கனமழை பெய்வதால் குளம், குட்டை, ஆற்றங்கரையோரப்பகுதிகளிலும் நீராதாரங்கள் நிறைந்த பகுதிகளுக்கும் மக்கள் செல்ல வேண்டாம். ஆற்றுப்பகுதிகளை கடக்க வேண்டாம். தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மக்கள் பாதுகாப்புடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.