உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மார்கழி மாத உபன்யாசம்

கோவை திருப்பாவை சங்கம் மற்றும் ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம் இணைந்து, ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், மாலை 6:30 முதல் இரவு 8:15 மணி வரை, மார்கழி மாத உபன்யாசம் நடக்கிறது. கல்யாணபுரம் ஸ்ரீ உ.வே.ஆர். ஆராவமுதாச்சாரியார் சொற்பொழிவாற்றுகிறார்.

ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி

ராம்நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில், ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம் துவங்குகிறது. காலை 8:30க்கு பிரார்த்தனை, புண்யாஹவசனம், ஸங்கல்பம், கலசஸ்தாபனம், ஜபம், தீபாராதனையும், மாலை 6:30க்கு வேத பாராயணமும் நடக்கின்றன.

பூஜா மஹோத்ஸவம்

ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், 74வது பூஜா மஹோத்ஸவ நிகழ்ச்சியில், காலை 7:00 மணி முதல் புருஷஸுக்கு ஹோமம், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம் ஸங்கல்பம், ஸ்ரீ ஐயப்பன் லட்ச்சார்ச்சனை, அன்னதானம், மஹா பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, ராம்நகர் சபர்பன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் நாமஸங்கீர்த்தனம் நடக்கின்றன.

வாராந்திர சத்சங்கம்

கோவை மலுமிச்சம்பட்டி, எப் 5, எப் 5 அம்பாள் நகர் 5வது வீதியில் உள்ள ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில், காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை, அத்வைத வேதாந்தம் என்ற தலைப்பில், வாராந்திர சத்சங்கம் நடக்கிறது. சுவாமி சங்கரானந்தா அருளுரை வழங்குகிறார்.

மார்கழி மஹா உத்சவம்

நவாவூர் பிரிவு, மருதமலை சாலையில் உள்ள விஷ்மயா அகாடமி அரங்கத்தில், மார்கழி மஹா உத்சவம் நடந்து வருகிறது. மாலை 5:30 முதல் 7:30 மணி வரை, அபிராமி மற்றும் குழுவினரின் பரதம் நிகழ்ச்சி நடக்கிறது. அதே போல், காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை, ஓவியப் பயிற்சி பட்டறையும் நடக்கிறது.

சர்க்கஸ் உற்சாகம்

'வீட்ல இருந்து ரொம்ப போரடிக்குது... எங்கேயாவது கூட்டிட்டு போங்கப்பா' என்று குழந்தைகள் சொன்னால், உற்சாகத்துக்கு குறைவில்லாத சரியான இடமாக இருக்கிறது ஜெமினி கிராண்ட் சர்க்கஸ். சிங்காநல்லுாரில், திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் அருகில், மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணிக்கு காட்சி நடக்கிறது.

ஷாப்பிங் திருவிழா

தென் மாநிலத்தின் மாபெரும் நுகர்வோர் கண்காட்சியான, கோயம்புத்துார் ஷாப்பிங் திருவிழா, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்து வருகிறது. காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. 380க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓவியப் படைப்புகள்

கோவை அவிநாசி சாலையில் உள்ள, கஸ்துாரி ஸ்ரீனிவாசன் கலை அரங்கத்தில், பார்பரா ஸ்ரீனிவாசன் நினைவு விருது வழங்கல் மற்றும் ஓவியப் பட்டறை காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை நடக்கிறது. விருது பெற்ற ஓவியங்கள் மற்றும் மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குடிநோய் விழிப்புணர்வு

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார் புனித ஜோசப் சர்ச்சிலும், கோவைப்புதுார், பேரூர் பிரதான சாலை, பாரத் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியிலும் இரவு 7:00 முதல் 8:30 மணி வரை நடக்கிறது.

மாநில கேரம் போட்டி

நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில், கல்லுாரியின் உடற்கல்வித்துறை, தமிழ்நாடு கேரம் அசோசியேஷன், கோவை மாவட்ட கேரம் அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான கேரம் போட்டி, காலை 9:00 மணி முதல் நடக்கிறது.

கோலப் போட்டி

'தினமலர்' நாளிதழ், தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை இணைந்து மார்கழி விழாக்கோலம்' கோலப்போட்டி, செல்வபுரத்தில் உள்ள மார்ட்டின் டெய்ஸி அபார்ட்மென்டில், காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது.

பென்ஷனர் தினவிழா

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு, கோவை தெற்கு மற்றும் மாநகர கிளைகள் இணைந்து நடத்தும் பென்ஷனர் தினவிழா, பாப்பநாயக்கன்பாளையம் சி.எஸ்.ஐ., துவக்கப் பள்ளியில், காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

கதர் பொருட்கள் கண்காட்சி

காதி மற்றும் கிராம தொழில்கள் தயாரிப்பு பொருட்களின், மாநில அளவிலான கண்காட்சி, ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் நடக்கிறது. மொத்தம் 100 ஸ்டால்கள் இடம்பெற உள்ளன. காதி தயாரிப்பு பொருட்களை வாங்க அருமையான வாய்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை