உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

திருவாதிரை உற்சவ விழா

பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோவிலில், வெகு விமரிசையாக நடந்து வரும் மார்கழி திருவாதிரை உற்சவ விழாவில், காலை, திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக கயிலாயக் காட்சி, இரவு, கிளிவாகன சேவை, அன்னுாஞ்சல் அருள்மிகு சோமாஸ்கந்தர் புறப்பாடு ஆகியவை நடக்கின்றன.

விஸ்வரூப தரிசனம்

குனியமுத்துார், நரசிம்மபுரம் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவிலில், அதிகாலை 4:15 முதல் காலை 6:45 மணி வரை, திருப்பள்ளி எழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனை, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் ஆகியவை நடக்கின்றன.

தெப்போற்சவம்

மேற்றலைத் தஞ்சாவூர் என அழைக்கப்படும் அன்னுார் அருள்மிகு ஸ்ரீ அருந்தவச்செல்வி உடனமர் ஸ்ரீ மன்னீஸ்வரஸ்வாமி திருத்தலத்தில், 25ம் ஆண்டு வெள்ளிவிழா ஆண்டு திருத்தேர் திருவிழாவில், மாலை 7:00 மணிக்கு தெப்போற்சவம் நடக்கிறது. பக்தர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பாவை திருவிழா

வாய்ஸ் ஆப் கோவை' மற்றும் 'தினமலர்' நாளிதழ் சார்பில், நவ இந்தியா, இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில், காலை 6:30 மணி முதல் திருப்பாவை திருவிழா நடக்கிறது. கோபூஜை, திருப்பாவை சேவாகாலம், 1,200 பெண்கள் கோபிகைகளாக மாறும் தயிர் கடையும் வைபவம் மற்றும் பிருந்தாவன நர்த்தனம், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், திருவிளக்கு பூஜை, எம்பெருமானார் தரிசன சபையின் 11வது ஆண்டு விழா ஆகியவை நடக்கின்றன.

ஸ்ரீ தியாகராஜ ஆராதனை

பாரதீய வித்யா பவன் கோவை மையம் சார்பில், பொங்கல் இசை விழாவில், காலை 8:30 மணிக்கு, சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஆராதனை விழா, மாலை 4:45 மணிக்கு, அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழக மாணவியரின் இசை நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு, பிரியா சகோதரிகளின் இசை நிகழ்ச்சி நடக்கின்றன.

மெகா கோலப்போட்டி

'தினமலர்' நாளிதழ் சார்பில், 'மார்கழி விழாக்கோலம்' மெகா கோலப்போட்டி, சரவணம்பட்டி புரோசோன் மாலில், காலை 8:00 முதல் 10:00 மணி வரை நடக்கிறது. புள்ளிக்கோலம், ரங்கோலி, பூக்கோலம் என தனித்தனியே பரிசீலிக்கப்பட்டு, அப்போதே பரிசுகள் வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும், சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

வாராந்திர நிகழ்வு

கோவை மலுமிச்சம்பட்டி, அம்பாள் நகர், எப் 5, ஐந்தாவது வீதி, அத்வைத வேதாந்த குருகுலம் ஆத்ம வித்யாலயத்தில், மாலை 5:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை வாராந்திர நிகழ்வு நடக்கிறது. ஆன்மிக ஐயம் தெளிதல் குறித்து, சுவாமி சங்கரானந்தா அருளுரை வழங்குகிறார்.

வீடியோ சத்சங்கம்

அமைதியின் அனுபவம் தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் வாயிலாக அமைதியை அனுபவிக்கலாம். அண்ணா சாலை எதிரில், ஓசூர் சாலையில் அமைந்துள்ள ஆருத்ரா ஹாலில், காலை 11:00 மணிக்கு, நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது.

பள்ளி ஆண்டு விழா

அன்னுார் கோவில்பாளையத்தில் உள்ள கோவை வித்யாஷ்ரம் பள்ளியில், ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா, காலை 9:30 மணி முதல் நடக்கிறது. மாணவர்களின் அணிவகுப்பு, கல்வி, விளையாட்டில் சிறந்தவர்களுக்கு கவுரவம், இசை நிகழ்ச்சி, இறுதிப் போட்டிகள் நடத்தி வெற்றி பெறுவோருக்கு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சார்பில், சுண்டக்காமுத்துார் டி.எஸ்., நர்சரி பள்ளியில், காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரையும், குனியமுத்துார், பாலக்காடு பிரதான சாலை, டிவைன் மேரி சர்ச்சில், மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரையும், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ