மேலும் செய்திகள்
இனிதாக கழியட்டும் இன்றைய நாள்
20-Jul-2025
கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில், சுவாமி தயானந்த சரஸ்வதியின் வீடுதோறும் கீதை உபதேசம் நிகழ்ச்சி நடக்கிறது. டாடாபாத், ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷனில், மாலை, 5:00 மணிக்கு கீதை உபதேசம் நடக்கிறது. நாம சங்கீர்த்தன வைபவம் கோவை, ஆஸ்திக சமாஜம் சார்பில், 26வது ஆண்டு நாமசங்கீர்த்தன வைபவம், தடாகம் ரோடு, இடையர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, வி.ஆர்.ஜி., மஹாலில் நடக்கிறது. காலை 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை, வேத பாராயணம், உஞ்சவ்ருத்தி, ஸ்ரீ சீதா கல்யாண மகோற்சவம், வசந்த கேளிகை, பவளிம்பு மற்றும் ஆஞ்சநேய உற்சவம் நடக்கின்றன. கம்பராமாயண சொற்பொழிவு ராம்நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடக்கிறது. மாலை, 6:30 முதல் நடக்கும் நிகழ்வில், திருச்சி கல்யாணராமன் சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார். அபிஷேக பூஜை சிறுமுகை, சென்னம்பாளையம், எமதர்மர் கோவிலில், அபிஷேக பூஜை நடக்கிறது. காலை, 7:00 முதல், ஸ்ரீ எமதர்மர் சுவாமிக்கு அபிஷேக பூஜையும், காலை, 11:00 மணிக்கு, மகா ஆயுள்விருத்தி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து மதியம், 12:00 மணி முதல், சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது. ஆன்மிக பயணம் ஸ்ருதி கேந்திரா நிறுவனர் பூஜ்யஸ்ரீ சுவாமி மோக் ஷா வித்யானந்தா சரஸ்வதி சுவாமிகளின் ஆன்மிக பயண நிகழ்ச்சி, திருச்சி ரோடு, கோத்தாரி லேஅவுட், சாதனாலயாவில் நடக்கிறது. அம்ருத பிந்து உபனிஷத் சொற்பொழிவு காலை, 7:00 மணி முதல் நடக்கிறது. மாலை, 5:30 மணி முதல் இசை நிகழ்ச்சியும், இரவு, 7:00 மணி முதல் கீதை சொற்பொழிவும் நடக்கிறது. அமைதியின் அனுபவம் தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் வாயிலாக, மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது. குடிநோய் விழிப்புணர்வு முகாம் ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது . * குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
20-Jul-2025