உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

புகைப்படக் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில், தென்னிந்தியாவின் மிகப்பெரும் போட்டோ, வீடியோ மற்றும் இமேஜிங் கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியுடன் புகைப்பட போட்டி, பயிலரங்கு, புகைப்பட கண்காட்சியும் நடக்கிறது. இன்றும், நாளையும் காலை 9.30 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். நவராத்திரி விழா டாடாபாத் அன்னை கஸ்துாரிபாய் மகளிர் மற்றும் நுகர்வோர் சங்கம் சார்பில் நவராத்திரி விழா இன்று, சுப்பராயன் வீதி ராதாகிருஷ்ணா வீதி சந்திப்பில் நடைபெற உள்ளது. மாலை 5.30 மணியளவில் நிகழ்வுகள் துவங்குகின்றன. சண்டி பாராயணம் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சாரதாலயம் கோயிலில் ஸ்ரீ சாரதா சரந்நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணிக்கு யாகசாலை பிரவேசம், சண்டி பாராயணம் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. நவராத்திரி பூஜை சவுரிபாளையம், ராஜிவ்காந்தி நகர் ஸ்ரீ ராஜ கணபதி விநாயகர் கோயிலில், முப்பெரும் தேவியர்களின் நவராத்திரி கொலு விழா நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு ஆறாம் நாள் பூஜை, தீபாராதனை நடைபெற உள்ளது. அம்மனுக்கு, திருவேங்கடமுடையாள் அலங்காரத்துடன் மாலை 6.30 மணிக்கு பக்தர்களுக்கு, அம்மன் அருள்பாலிப்பார். கொலு பொம்மை கண்காட்சி டவுன்ஹால், பூம்புகார் நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. காலை 10 மணி முதல் வாடிக்கையாளர்கள் கொலு பொம்மைகளை பார்வையிடவும், வாங்கவும் அனுமதிக்கப்படுவர். அக். 4 வரை இக்கண்காட்சி நடைபெறும். நவராத்திரி மஹோத்சவம் வேத பாடசாலை சார்பில் சரத்கலா நவராத்திரி மஹோத்சவம் கடந்த, 24ம் தேதி முதல் நடக்கிறது. இன்று காலை, 8:30 மணியளவில் திருவெங்கடசாமி சாலை அன்னபூர்ணேஸ்வரி யோக நரசிம்ம சன்னதியில் சுதர்சன் ஹோமம், சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !