மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
கந்தசஷ்டி விழா சுக்கிரவார்பேட்டை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில், 63வது கந்த சஷ்டிப் பெருவிழா நடக்கிறது. காலை 10 முதல் அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு வேடன் அலங்காரம், இரவு 7 மணிக்கு தேவாரம், திருப்புகழ் பாராயணம் நடக்கிறது. சண்டி ஹோமம் தடாகம்ரோடு,கே.என்.ஜி. புதுார், சிருங்கேரி சிவகுரு மகாவிஷ்ணு சேத்ரத்தில், சண்டி மஹா ஹோமம் நடக்கிறது.காலை 9 முதல் 11 மணி வரை, சக்கர நவாவரண பூஜையும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை சண்டி ஹோமமும் நடக்கிறது. உயர்ந்த பக்தி எது? ராம்நகர், ராமர் கோயில் பிரவசன மண்படத்தில் மாலை 6.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. சொற்பொழிவாளர் ரகுநாத்தாஸ் மஹராஜ், 'உயர்ந்த பக்தி எது?' என்ற தலைப்பில் அபங்க சங்கீர்த்தனம் ஹரிகதையை வழங்குகிறார். பதஞ்சலி யோக சூத்திரம் மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில் வாராந்திர சத்சங்கம் நடக்கிறது. மாலை, 5.30 முதல் இரவு 7 மணி வரை பதஞ்சலி யோக சூத்திரம் என்ற தலைப்பில் ஆச்சார்யா சுரேஷ் உரையாற்றுகிறார். அமைதியின் அனுபவம் தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது. எழுத்தாளர், கலைஞர் மாநாடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின், கோவை மாவட்ட 16வது மாநாடு வரதராஜபுரம், சக்கரையார் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் நடக்கிறது. மசக்காளிபாளையம் மைதானத்தில், மாலை 5 மணி முதல் கலைவிழா நடக்கிறது. முன்னதாக நிகர் கலைக்குழுவினரின் பறையிசை மற்றும், புகைப்பட - கவிதை கண்காட்சி திறக்கப்படுகிறது. கண் சிகிச்சை இலவச முகாம் சம்ருதா மெடிக்கல் சென்டர் மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் கண் சிகிச்சை இலவச முகாம் நடக்கிறது. நேரு நகர், சம்ருதா மெடிக்கல் சென்டரில் காலை 9.30 முதல் மதியம் 2.30 மணி வரை முகாம் நடைபெறும். சிலப்பதிகாரத் திருவிழா கோவை மாவட்டப் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் சிலப்பதிகாரத் திருவிழா நடக்கிறது. போத்தனுார், ரயில்வே மனமகிழ் மன்றத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முயற்சி திருவினையாகும் போத்தனுார் ரோடு, செட்டிபாளையம், தாமரைக் கோயிலில், 89வது மாதாந்திரக் கூட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு, சச்சிதானந்த ஆலயத்தில், 'முயற்சி திருவினையாக்கும்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. அனுமதி இலவசம். அடர்வனக் களப்பணி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், பாலக்காடு ரோடு, காளவாய், ஆபிதா ஹோட்டல் எதிரில், குறிச்சி வாய்க்கால் மியாவாக்கி அடர்வனக் களப்பணி காலை 7 மணிக்கு நடக்கிறது. வாய்க்காலின் இரு புறங்களிலும் நடப்பட்டுள்ள ஆயிரத்து 500 மரக்கன்றுகள் பராமரிக்கப்படவுள்ளன. எலும்பு அடர்த்தி பரிசோதனை கை வலி, கால் வலி, உடல் சோர்வு, எலும்பு வலி போன்ற பிரச்னைகளை கண்டறிந்து சரிசெய்ய, இலவச எலும்பு அடர்த்தி பரிசோதனை நடக்கிறது. நேரு நகர், சம்ருதா மெடிக்கல் சென்டர் மற்றும் கிளினிக்கில், காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.