உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ஆன்மிக ஐயம் தெளிதல் மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில், வாராந்திரசத்சங்கம் நடக்கிறது. ' அறிவியல் ஆன்மிக ஐயம் தெளிதல்' என்ற தலைப்பில், சுவாமி சங்கரானந்தா உரையாற்றுகிறார். பகவத்கீதை சொற்பாழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில், சுவாமி தயானந்த சரவஸ்வதியின் வீடுதோறும் கீதை உபதேசம் நடக்கிறது. டாடாபாத், மூன்றாவது வீதி, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷனில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. நுால் வெளியீட்டு விழா விழிப்புணர்வு, ஒற்றுமை மற்றும் நாகரிக மறுமலர்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் 'ஹிந்து தேசத்தில் ஹிந்துக்கள்' தமிழ் மொழி பெயர்ப்பு நுால்வெளியீட்டு விழா நடக்கிறது. அவிநாசி ரோடு, சர்தார் வல்லபாய் படேல் கலையரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. பட்டமளிப்பு விழா சத்தி ரோடு, குரும்பபாளையம், கே.வி. மேலாண்மை மற்றும் தகவல் கல்வி நிறுவனத்தின் 13வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. காலை 9 மணிக்கு துவங்கும் விழாவில், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமிசிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். ஓவிய கண்காட்சி ஓவியர் அஜய் கிருஷ்ணாவின், பழங்காலத்தை நினைவுப்படுத்தும் வகையில் 'ரெட்ரோஸ்பெக் லைவ்' என்ற பெயரில், ஓவியக் கண்காட்சி நடக்கிறது. பீளமேடுடி.சி., ஆர்ட் கேலரியில் காலை 11 மணி முதல் கண்காட்சியை பார்வையிடலாம். அனுமதி இலவசம். அமைதியின் அனுபவம் தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11.00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது. குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு, 7 முதல் 8.30 மணி வரை, முகாம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை