உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

 மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ஹரிகதை ஆர்.எஸ்.புரம், பாரதீய வித்யா பவன் சார்பில், ஹரிகதை நிகழ்ச்சி, மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. 'சுந்தர கண்ட சாரம்' என்ற தலைப்பில், ஆராவமுதாச்சாரியார் உரையாற்றுகிறார். சத்ய சாய் நுாற்றாண்டு விழா ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் மற்றும் ராம்நகர், சத்ய சாயி சேவா சமிதி சார்பில், சத்ய சாய் நுாற்றாண்டு விழா நடக்கிறது. காலை 5 முதல் இரவு 8 மணி வரை, சங்கீர்த்தனம், பிரசாந்தி கொடியேற்றம், கணபதி ஹோமம், நாராயண சேவை, சாய் பஜன், சொற்பொழிவு, பிரசாத விநியோகம் நடக்கிறது. கும்பாபிஷேக விழா மதுக்கரை, மரப்பாலம், சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை 5 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடக்கிறது. காலை 7 முதல் 8.30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்படும். அமைதியின் அனுபவம் தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11.00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது. நுால் வெளியீட்டு விழா சவுரிபாளையம், சண்முகப்பிரியா மருத்துவமனை, கம்பன் கலைக்கூடத்தில், நுால் வெளியீட்டு விழா காலை 10 மணி முதல் நடக்கிறது. 'தேனுாறும் திருவாசகமும் வான்புகழ் வள்ளுவமும்' என்ற நுால் வெளியிடப்படுகிறது. ஓவியக் கண்காட்சி தனித்துவமிக்க ஓவியக் கலையான நெருப்பு ஓவியக் கண்காட்சி, அவிநாசி ரோடு, டி.சி.ஆர்ட் கேலரியில் காலை 11 முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. ஓவியர் வசந்தகுமார் தனது நெருப்பு ஓவியப்படைப்புகளை காட்சிப்படுத்துகிறார். மரக்கன்றுகள் நடும் விழா கருமத்தம்பட்டி, ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., மற்றும் கவுசிகா நீர்க்கரங்கள் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடக்கிறது. கவுசிகா நதி மீட்பு திட்டத்தின் படி கோவில்பாளையம் பகுதியில் மரக்கன்றுகள் காலை 7 மணி முதல் நடப்படுகின்றன. பகவத்கீதை சொற்பாழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில், சுவாமி தயானந்த சரஸ்வதியின் வீடுதோறும் கீதை உபதேசம் நடக்கிறது. டாடாபாத், மூன்றாவது வீதி, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசனில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. 'ஸ்கை டேன்ஸ்' கொடிசியா, பார்க் கிரவுண்ட் மைதானத்தில், 'ஸ்கை டேன்ஸ்' எனப்படும் லேசர் ஷோ நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6.30 முதல் இரவு 10 மணி வரை குழந்தைகள் உள்ளிட்ட பார்வையாளர்களை கவரும் தனித்துவமான ஒளி, ஒலி லேசர் ஷோ இடம்பெறுகிறது. குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு, 7 முதல் 8.30 மணி வரை, முகாம் நடக்கிறது. ரத்ததான முகாம் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் சிங்காநல்லுார் மற்றும் நேசனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து, ரத்ததான முகாமை நடத்துகின்றன. பள்ளி வளாகத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடக்கிறது. புதுப்பிக்கப்பட்ட கிளை திறப்பு அன்னபூர்ணாவின் பீப்பிள்ஸ் பார்க் கிளை வாடிக்கையாளர் வசதிக்கேற்ப புதியதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, இன்று காலை 8 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை