சுற்றுலா பயணியர் வருகை; களைகட்டியது வால்பாறை
வால்பாறை; வால்பாறையில் குவிந்துள்ள சுற்றுலா பயணியர் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.வால்பாறைக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம், டைகர் பால்ஸ், கவர்க்கல் வியூ பாய்ன்ட், நல்லமுடி பூஞ்சோலை, சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை, சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.வால்பாறையில்,பருவமழைக்கு பின் கடந்த சில நாட்களாக குளுகுளு சீசன் நிலவி வருகிறது. இதனால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் வால்பாறையில் குவிந்துள்ளனர்.இதனிடையே பள்ளிகள் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணியர் அதிக அளவில் வால்பாறையில் திரண்டுள்ளனர். சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, படகுசவாரி, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களை கண்டு ரசிப்பதோடு, நகரில் உள்ள அம்மா படகு இல்லத்தில் படகுசவாரி செய்தும் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.