உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறை-சாலக்குடி ரோட்டில் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை

வால்பாறை-சாலக்குடி ரோட்டில் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை

வால்பாறை;கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோடு சீரமைக்கும் பணி நடக்கிறது. மளுக்கப்பாறையிலிருந்து, சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி ரோட்டில், 10 கி.மீ., துாரம் உள்ள ரோடு, புதுப்பிக்கும் பணி நேற்று துவங்கியது.இதனால், வால்பாறை - சாலக்குடி இடையே சுற்றுலா வாகனங்கள் செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.கேரள மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையிலிருந்து மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி செல்லும் ரோடு புதுப்பிக்கும் பணி நடப்பதால், நேற்று முதல் 12ம் தேதி வரை சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.அதே போல், 20ம் தேதி முதல் பிப்., 5ம் தேதி வரையிலும் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் செல்ல தடையில்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை