உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீர்வீழ்ச்சிகளில் குளிக்க அனுமதி; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

நீர்வீழ்ச்சிகளில் குளிக்க அனுமதி; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

வால்பாறை; நீர்வீழ்ச்சிகளில் மீண்டும் குளிக்க சுற்றுலா பயணியருக்கு அனுமதி வழங்கியதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்னர்.கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி, சார்பா,வாளச்சால் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன.இந்நிலையில் கடந்த 15 நாட்களாக கேரளாவில் பெய்த கனமழையினால் சுற்றுலாபயணியர் அங்குள்ள அருவில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.கடந்த ஐந்து நாட்களாக, கேரள மாநிலத்தில் பருவ மழையின் தாக்கம் குறைந்ததால், மீண்டும் சுற்றுலாபயணியர் குளிக்க வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர். இதனால் அதிரப்பள்ளியில் திரண்டுள்ள சுற்றுலாபயணியர் சார்பா, வாளச்சால் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கேரள மாநிலம் சாலக்குடி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த 15 நாட்களுக்கு மேலாக தென்மேற்குபருவமழை தீவிரமாக பெய்து வந்ததால், சுற்றுலாபயணியர் பாதுகாப்பு கருதி குளிக்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது மழைப்பொழிவு வெகுவாக குறைந்துள்ளதால், அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாபயணியர் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.* வால்பாறையில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப்பருவ மழை பரவலாக பெய்தது. இதனால் வன வளம் பசுமையானதோடு, தேயிலை செடிகளும் மீண்டும் துளிர்விட்டு பசுமையாக காட்சியளிக்கிறது.மழைப்பொழிவு குறைந்த நிலையில், தற்போது குளு குளு சீசன் துவங்கியுள்ளது. சமவெளிப்பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், சுற்றுலா தலமான வால்பாறையை கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் திரண்டுள்ளனர்.வால்பாறைக்கு வரும் அவர்கள் பகல் நேரத்தில் வெளியில் நடமாடும் யானை, காட்டுமாடு, வரையாடு, சிங்கவால் குரங்குகளையும், அரிய வகை பறவைகளையும் கண்டு ரசிக்கின்றனர்.மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள வால்பாறையில் உள்ள நீர்வீழ்ச்சிகள், காட்சிமுனை, அணைகள், பசுமை போர்த்திய தேயிலை தோட்டங்கள் உள்ளிட்டவையும் சுற்றுலா பயணியர் மனதை வெகுவாக கவர்ந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை