உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கவியருவியில் குளிக்க அனுமதி; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

கவியருவியில் குளிக்க அனுமதி; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

ஆனைமலை ; ஆனைமலை அருகே, ஆழியாறு கவியருவியில், சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவமழை கடந்த சில வாரங்களாக இடைவிடாமல் பெய்தது. இதனால், ஆழியாறு கவியருவியில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு, தடுப்பு வேலிகள் அடித்து செல்லப்பட்டதால் சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறை வாயிலாக, தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 10 நாட்களுக்கு பின், நீர் வரத்து குறைந்ததால், தடுப்பு வேலிகள் சீரமைக்கப்பட்டு, அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து, சுற்றுலா பயணியர் அருவியில் குளித்து மகிழ்ந்ததுடன், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி