உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறையில் கோடைமழை சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

வால்பாறையில் கோடைமழை சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

வால்பாறை: வால்பாறையில் இடையிடையே பெய்து வரும் கோடை மழையால், சுற்றுலாபயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக, மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்தது. இதனால் பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வால்பாறையில் வெயில் கொளுத்திய நிலையில், கடந்த ஒரு மாதமாக இடையிடையே கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. வால்பாறையை குளிர்விக்கும் வகையில் பெய்து வரும் கோடைமழையால் சுற்றுலாபயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு(மி.மீ.,): சோலையாறு - 8, வால்பாறை - 2, கீழ்நீராறு - 2, பெருவாரிப்பள்ளம் - 10.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !