உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குளுகுளு சீசன் துவக்கம் சுற்றுலா பயணியர் குஷி

குளுகுளு சீசன் துவக்கம் சுற்றுலா பயணியர் குஷி

வால்பாறை, ; வால்பாறையில் குளுகுளு சீசன் நிலவுவதால், சுற்றுலாபயணியர் வருகை அதிகரித்துள்ளது. வால்பாறையில் பருவமழைக்கு பின், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் குளுகுளு சீசன் நிலவுகிறது. வெயிலுடன் சாரல்மழையும், அவ்வப்போது பெய்து வருவதால், வால்பாறையை கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். வால்பாறையில் சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயின்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணியர் அதிக அளவில் செல்கின்றனர். இதனிடையே, சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில், சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஆற்றுப்பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், சாரல் மழை, பனி மூட்டம், லேசான வெயில் என, குளுகுளு சீதோஷ்ண நிலையை கண்டு, சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை