உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தகவல் மையம் அமைக்க தேவை :சுற்றுலா பயணியர் வேண்டுகோள்

தகவல் மையம் அமைக்க தேவை :சுற்றுலா பயணியர் வேண்டுகோள்

வால்பாறை: தமிழக சுற்றுலாத்துறை சார்பில், வால்பாறையில் சுற்றுலா தகவல் மையம் அமைக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தின் சுற்றுலா தலமான வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள வால்பாறையில், வனவிலங்குகளும், பசுமை மாறாக்காடுகளும், கண்ணுக்கு எட்டிய துாரம் பசுமையான தேயிலை எஸ்டேட்களும் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் செல்லும் இடம் தெரியாமல் நடுரோட்டில் நின்று தவிக்கின்றனர். சுற்றுலாபயணியர் கூறியதாவது: ஊட்டி, கொடைக்கானலையடுத்து வால்பாறைக்கு தான் அதிகளவில் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும்வகையில், சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டு தோறும் கோடைவிழாவும் நடத்தப்படுகிறது. வால்பாறையில் பல்வேறு இடங்களை காண சுற்றுலா பயணியர் மிகுந்த ஆர்வத்துடன் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லாததால், செல்லும் இடம், துாரம் தெரியாமல் தவிக்கின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், வால்பாறை நகரில் சுற்றுலாத்துறை சார்பில் 'சுற்றுலா தகவல் மையம்' அமைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி