உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

ரோட்டில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை;வால்பாறை - அக்காமலை, குறுகலான ரோட்டில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.வால்பாறையில் இருந்து, 8 கி.மீ., தொலைவில் உள்ளது கருமலை எஸ்டேட். இங்கிருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள அக்காமலை எஸ்டேட் ரோடு, நகராட்சி சார்பில் சமீபத்தில் சீரமைக்கப்பட்டது.குறுகலான இந்த ரோட்டில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத நிலையில் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.இந்நிலையில், நேற்று பொள்ளாச்சியில் இருந்து அக்காமலை தேயிலை தொழிற்சாலைக்கு விறகு ஏற்றி சென்ற லாரி, எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிடும் போது, எதிர்பாராத விதமாக ரோட்டோர பள்ளத்தில் சரிந்தது. அதன்பின் தொழிலாளர்களின் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது. இதனால், அக்காமலை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பொதுமக்கள் கூறுகையில், 'அக்காமலை எஸ்டேட் ரோட்டை, நகராட்சி சார்பில் புதுப்பித்தும் எவ்வித பலனும் இல்லை. குறுகலான ரோட்டில், எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட முடியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நகராட்சி சார்பில், கருமலை பிரிவில் இருந்து அக்காமலை வரை ரோட்டை விரிவுபடுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி