உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கன்டெய்னர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு

கன்டெய்னர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு

போத்தனூர்; கோவை, சுந்தராபுரம் அருகே, நேற்று மதியம் கோவை -- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், கன்டெய்னர் லாரி ஒன்று, ஆத்துப்பாலம் நோக்கி வந்தது. சாரதா மில் சாலை சந்திப்பு பகுதியில், கார் ஒன்று செல்ல லாரியை, டிரைவர் சாலையின் இடதுபுறம் ஓட்டினார். எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் மேலே சென்ற மரக்கிளையில் மோதியது. கிளை உடைந்து, சாலையின் மையப்பகுதியில் செல்லும் போலீஸ் சிசிடிவி கேமரா கேபிளில் சிக்கியது. அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்த சுந்தராபுரம் ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து போலீசார், அங்கு வந்து மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். வாகனங்கள், எல்.ஐ.சி., காலனியிலிருந்து மதுக்கரை மார்க்கெட் சாலையில் செல்லும் வகையில், திருப்பி விடப்பட்டன. மதியம் 2:45 முதல், 4:15 மணி வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சிசிடிவி கேமரா, கேபிள் சேதமாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !