உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டிலேயே நிறுத்தப்படும் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு

ரோட்டிலேயே நிறுத்தப்படும் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, ரோட்டிலேயே புறநகர் பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கி விடுவதால், நெரிசல் ஏற்படுகிறது.பொள்ளாச்சியில் புதிய மற்றும் பழைய பஸ்ஸ்டாண்ட்கள் உள்ளன. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழநி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, கேரளா மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் செல்கின்றன.இந்நிலையில், திருப்பூர் மற்றும் பழநி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள், பஸ்ஸ்டாண்ட் அருகே ரோட்டில் நிறுத்தி பயணியரை இறக்கி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுக்கு வரும் வெளியூர் பஸ்களை ரோட்டிலேயே நிறுத்தி பயணியரை இறக்குகின்றனர். மேலும், பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பஸ்களும், ரோட்டில் நிறுத்தி பயணியரை ஏற்றிச்செல்வதும் தொடர்கிறது. இதனால், மற்ற வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இது குறித்து, போக்குவரத்து போலீசார் அவ்வப்போது அறிவுறுத்தினாலும், ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.பாலக்காடு ரோடு முக்கிய வழித்தடமாக உள்ள நிலையில், இந்த ரோட்டில் இதுபோன்று செயல்களை கண்காணித்து சரி செய்ய வேண்டும். எனவே, போக்குவரத்துக்கழக அதிகாரிகள், உரிய அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ