உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேதம் அடைந்த பாலத்தால் போக்குவரத்து நெரிசல்

சேதம் அடைந்த பாலத்தால் போக்குவரத்து நெரிசல்

அன்னுார்; அன்னுாரில் பாலத்தில் ஏற்பட்ட குழியால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.அன்னுாரில் சத்தி சாலையிலிருந்து, அவிநாசி சாலையை இணைக்கும் சர்ச் வீதி சாலையில் பெரிய பாலம் உள்ளது. இந்த பாலத்தின் நடுவே ஒரு அடி நீளமும், ஒரு அடி அகலமும் உள்ள குழி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பாதையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சத்தி சாலையிலும், அவிநாசி சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது நான்கு சக்கர வாகனங்கள் சர்ச் வீதி சாலை வழியாக சென்று வந்தன. தற்போது இந்த குழியால், இந்த பாதையை இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.முகூர்த்த நாட்களிலும், மற்ற நாட்களில் காலை, மாலை நேரங்களிலும், கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்நிலையில் சர்ச் வீதி சாலையை பயன்படுத்த முடியாததால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் விரைவில் பாலத்தில் ஏற்பட்ட குழியை சரி செய்து, இந்த வழித்தடத்தில் நான்கு சக்கர வாகனங்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை