உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் தாமதம் பயணியர் அவதி

ரயில் தாமதம் பயணியர் அவதி

கிணத்துக்கடவு; கோவை - பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில் தொழில் நுட்ப கோளாறுஏற்பட்டதால், ரயில் தாமதமானது.பொள்ளாச்சி - கோவை இடையே இயக்கப்படும் ரயில்களை, நாள்தோறும், 500க்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று கோவையில் இருந்து, காலை, 5:20 மணிக்கு இயக்கப்பட்ட ரயில், கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு காலை, 5:55 மணிக்கு வந்தது. அதன் பின் ஏற்பட்ட டிராக் டிரைவ் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 7:34 மணிக்கு கிளம்பி, 8:00 மணிக்கு பொள்ளாச்சியை அடைந்தது. இதனால், பொள்ளாச்சியில் இருந்து காலை, 7:20 மணிக்கு இயக்கப்பட இருந்த ரயில், 8:45 மணிக்கு இயக்கப்பட்டு, 9:45 மணிக்கு கோவைக்கு சென்றது. இதனால், வழக்கமாக பணிக்கு செல்லும் ரயில் பயணியர் பலர் பாதிக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக ரயில் தாமதமானதால் பயணியர் பலர் பஸ் பயணத்தை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி