உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

மேட்டுப்பாளையம்,; மேட்டுப்பாளையம் மணி நகரில் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையம் உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் இரண்டு, நான்கு, ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ள தேர்வுகள் மற்றும் இதர அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க விழா, அறிவு சார்ந்த மையத்தில் நடந்தன.நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் அமுதா தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் பயிற்சி வகுப்பு துவக்கி வைத்தார். துணைத் தலைவர் அருள் வடிவு முன்னிலை வைத்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் குப்புராஜ், கோவை அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் கணேஷ், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ரகு, மற்றும் ரிஷி சரவணன், மணி, சுகுமாரன் ஆகியோர், பயிற்சி வகுப்புகள் எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விளக்கினர்.இந்த தேர்வு பயிற்சி வகுப்பில் ஏராளமான இளைஞர், இளம் பெண்கள், கல்லூரி மாணவ, மாணவியர் ஆகியோர் பங்கேற்றனர். நகராட்சி பணியாளர் ஜெயராமன் வரவேற்றார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !