உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய அளவிலான கராத்தே போட்டி 19 வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி

தேசிய அளவிலான கராத்தே போட்டி 19 வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி

கோவை : தேசிய கராத்தே போட்டிக்கு, 19 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் வரும், 11 முதல், 15ம் தேதி வரை தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இப்போட்டிக்கு ஏற்கனவே மாவட்ட, மாநில அளவில் தங்கம் வென்ற வீரர்கள் தகுதிபெற்றுள்ளனர்.அதன்படி, கோவையில் இருந்து, 12 பேர் சப் ஜூனியர் பிரிவிலும், ஜூனியர் பிரிவில் மூன்று பேர் உட்பட, 19 பேர் தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு, கோயம்புத்துார் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள், இலங்கையில் நடக்கும் தெற்கு ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்கும் ஆசியன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர்.இப்போட்டிகளுக்கு தகுதி பெறும் விதமாக வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இச்சங்க நிர்வாகிகளான கார்த்திகேயன், ராஜா, ரவிக்குமார் ஆகியோர், தேசிய அளவிலான போட்டியின் நடுவர் அணியில், இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை