உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நெல்லி ஜாம் தயாரிக்க பயிற்சி

நெல்லி ஜாம் தயாரிக்க பயிற்சி

கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நாளை மற்றும் வரும் 17ம் தேதி காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில், பயிற்சி நடைபெறும். இதில், நெல்லி பானங்களான பழ ரச பானம் மற்றும் ரெடி மிக்ஸ் பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி, நெல்லி துருவல் போன்றவை தயாரிக்க பயிற்றுவிக்கப்படும். விவரங்களுக்கு, 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ