உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புளூடூத்  தராசை பயன்படுத்த பயிற்சி 

புளூடூத்  தராசை பயன்படுத்த பயிற்சி 

கோவை, ; கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில், பிஓஎஸ் மெஷினுடன் எலக்ட்ரானிக் தராசை புளூடூத் வாயிலாக இணைத்து, பில் போடும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள, 1540 ரேஷன்கடைகளில், 800 க்கும் மேற்பட்ட கடைகளில் புளூடூத் தராசு இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தராசை பயன்படுத்தும் முறை குறித்து, ரேஷன்கடை ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த பயிற்சி வகுப்பில், 70 ரேஷன் கடைகளை சேர்ந்த ரேஷன் ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த பயிற்சி வகுப்பில், புதிய தராசை எவ்வாறு பயன்படுத்தி எடை போடுவது என்பது குறித்தும், கார்டுதாரர்களை காத்திருக்க வைக்காமல், விரைவாக பொருட்களை வழங்குவது குறித்தும், பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி