உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்குவரத்து கழக நிர்வாகிகள் தேர்வு

போக்குவரத்து கழக நிர்வாகிகள் தேர்வு

அன்னுார்: அரசு போக்குவரத்து கழகத்தின் அன்னுார் கிளையில், தொ.மு.ச., நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. எட்டு பதவிகளுக்கு எட்டு பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். தொழிற்சங்க கிளை தலைவராக ராமநாதன், செயலாளராக ரமணி, பொருளாளராக ரவி, துணை செயலாளராக குமார், துணை தலைவராக ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகளாக வெங்கடாசலம், பாலமுருகன், கோபால்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு, ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை