ரோட்டோரம் விழுந்த மரம்; அகற்றுவதில் தாமதம் ஏனோ?
பொள்ளாச்சி; பொள்ளாச்சி - பனிக்கம்பட்டி வழித்தடத்தில், ரோட்டோரத்தில் விழுந்த மரம் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது.பொள்ளாச்சி - பனிக்கம்பட்டி ரோட்டில், அதிகப்படியான குடியிருப்புகள் உள்ளன. இவ்வழித்தடத்தில், ரோட்டோரத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்து கிடக்கிறது. மரம் சாய்ந்து பல நாட்கள் கடந்தும், அதை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.விழுந்த மரம், வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. அவ்வழியே கடந்து செல்லும் பாதசாரிகள் பரிதவிக்கின்றனர்.இது ஒருபுறமிருக்க, ரோடும் குண்டும் குழியுமாக உள்ளது. மழையின்போது தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டுநர்கள், அவசர தேவைக்கு விரைந்து செல்ல முடியவில்லை.மக்கள் கூறுகையில், 'பனிக்கம்பட்டி வழித்தடம், கிராமங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக இருந்தும், நாள் கணக்கில் கிடக்கும் மரக்கிளையை அகற்ற, அதிகாரிகள் யாரும் முனைப்பு காட்டவில்லை. துறை ரீதியான அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு நடத்தி, மரக்கிளையை அகற்றவும், சேதமடைந்த ரோட்டை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.