உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளியில் மரக்கன்று நடும் விழா

பள்ளியில் மரக்கன்று நடும் விழா

பொள்ளாச்சி; பொள்ளாச்சி ராஷ்டிரியா வித்யா பவன் பள்ளியில், மரக்கன்று நடும் விழா நடந்தது. மேகாலயாவின் முன்னாள் கவர்னர் சண்முகநாதன் விழாவை துவக்கி வைத்தார்.விழாவில், ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் தனசேகர், ரேட்டரி கிளப் பொள்ளாச்சி ராயல்ஸின் பட்டைய தலைவர் செந்தில்குமார் காளிங்கராயர் பேசினர். மரக்கன்று நடுவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் தீபக் கனகராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி