காட்டு மாடு தாக்கியதில் பழங்குடி வாலிபர்கள் காயம்
வால்பாறை, ; வால்பாறை அடுத்துள்ள வில்லோனி நெடுங்குன்று செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்தவர்கள் சிவதாஸ், 25, கீர்த்தி கிருஷ்ணன், 24, ஆகியோர் வால்பாறைக்கு பைக்கில் சென்றனர்.அப்போது, ரோட்டை கடக்க முயன்ற காட்டுமாடு, பைக்கில் சென்ற வாலிபர்களை தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். அங்கிருந்தோர், அவர்கள் இருவரையும் மீட்டு, வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த வனத்துறையினர், இருவருக்கும் தலா, 2,500 ரூபாய் முதலுதவி தொகையாக வழங்கினர். மூக்கில் காயமடைந்த கீர்த்தி கிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த நான்கு மாதத்தில், வால்பாறையில் காட்டுமாடு தாக்கி பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.